Saturday, January 24, 2009

நினைவுகள்

கடந்து வந்த நிஜங்கள் எல்லாம் நினைவுகளாய் மாறும் நேரம் நிஜத்தில் தொடர்ந்த நபர்களும் இடங்களும் மறைந்து போக வாய்ப்பு உண்டு. அப்படி பட்ட நாட்களில் அந்த சுகமான சந்தோஷமான நினைவுகள் கூட மனதை சிறிது உரசி பார்ப்பது உண்டு.

வெள்ளை தேசத்தில் நான்கு சுவர்களுக்கு நடுவில் உறக்கம் கலைந்த ஒரு இரவில் மனம் போன போக்கில் எழுத பட்ட சில வரிகள் தான் இவை. கிறுக்கல்கள் என்றே சொல்லலாம்.... ஏனோ எனக்கு பிடித்து போனது... மனதின் ஓரத்தில் உறங்காமல் உரசிடும் சில நினைவுகளும் தனிமையும்... அவை தரும் பல அர்த்தமற்ற புன்னகைகளும் சில சோகங்களும்....

.....

என் அறைகளின் சுவர்களில் மோதி மோதி எதிரொலிக்கிறது
என் மௌனங்கள் மிக சத்தமாய்

என்னை சுற்றிலும் என் தனிமை
என்னுடன் மௌன மொழி பேசி கொண்டு...

கடந்த கால இனிமையான நிஜங்கள் எல்லாம்
நிழல்களாய் நினைவுகளாய் இங்கு விரிந்து நிற்கின்றன

நீ தேவதை தான் சந்தேகம் இன்றி
ஆனால் தேவதை நிழல் மட்டும் நிறம் மாறிடுமோ

உன் நினைவுகள் இன்று மாமிச பட்சியாய் மாறி
என் தனிமை தின்று சிரிக்கிறது

என் தனிமையில் எவர்க்கும் அனுமதி இல்லை தான்
அனுமதி கேட்டா நுழைந்தன உன் நினைவுகள்....

.....

நன்றி நிலாவன், காயத்ரி, தேவா உங்களது முந்தைய கருத்துகளுக்கு....

5 comments:

  1. என் அறைகளின் சுவர்களில் மோதி மோதி எதிரொலிக்கிறது
    என் மௌனங்கள் மிக சத்தமாய்
    உன் நினைவுகள் இன்று மாமிச பட்சியாய் மாறி
    என் தனிமை தின்று சிரிக்கிறது

    என் தனிமையில் எவர்க்கும் அனுமதி இல்லை தான்
    அனுமதி கேட்டா நுழைந்தன உன் நினைவுகள்...

    அருமையான வரிகள் .....நண்பரே

    ReplyDelete
  2. \\என் தனிமையில் எவர்க்கும் அனுமதி இல்லை தான்
    அனுமதி கேட்டா நுழைந்தன உன் நினைவுகள்....\\

    SUPER...
    NALLA IRUKKUNGA..

    ReplyDelete
  3. நன்றி நிலாவன், லோகு

    ReplyDelete
  4. என் தனிமையில் எவர்க்கும் அனுமதி இல்லை தான்
    அனுமதி கேட்டா நுழைந்தன உன் நினைவுகள்....

    // Superb lines..

    ReplyDelete