Sunday, July 12, 2009

உதிர்ந்து விழும் கருவறைகள்



தோன்றிடும் முன்னே உதிர்ந்து விட்டாயே

விரல் பிடித்து நடை பழக பொறுமை இல்லாமல்
சிறகுகள் கொண்டு பறந்து விட்டாயா

மொழி நிறம் உருவம் என்று அலையும் உலகில்
உருவம் கொள்ளாமல் சதை பிண்டமாய் மறித்து விட்டாயா

என்னுடல் பிரிய மனம் இன்றி
என்னுளே உறங்கி விட்டாயா

சொல்லடி என் தங்கமே

தொட்டு தடவி மகிழ்ந்த கைகள் இன்று
நீ இல்லா வெறுமையை வருடியபடி
நீ கலையவில்லை என்னுள் கலந்து விட்டாய்
என கூற கதறுகிறது

இது கலைதல் அல்ல மரணம்
ஒரு தாய்மையின் மரணம்

10 comments:

  1. மனது வலித்தது

    வரிகளில் பிரிவு

    ReplyDelete
  2. இந்த துயரம் அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும்...

    ReplyDelete
  3. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வந்திருக்கிறீர்கள். இப்படி ஒரு கலங்க வைக்கும் கவிதையும் எழுதுகிறீர்கள். என்ன சொல்வதென்று தெரியவில்லை.
    என் பட்டாம் பூச்சி உங்கள் வலயத்தில் பறகடிப்பது மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது.

    ReplyDelete
  4. இது என்னை நானாய் ஏற்று கொண்ட எனது தோழிக்கு சமர்ப்பணம்... எனது மற்றும் உங்கள் அன்பும் பிரார்த்தனையும் அவளுக்கு துணை இருக்கட்டும்...

    ReplyDelete
  5. இதை படித்தால், கருவைக் கலைக்க நினைப்பவள் கூட கதறி அழுவாள் செய்யவிருந்த கொலையை எண்ணி. கடைசி வரியில் மொத்த வலியும் தெரிகிறது

    ReplyDelete
  6. hai ivan ungaluku en bloglaour avord koduthu iurken parunga pa

    ReplyDelete
  7. நல்லா இருக்குங்க கவிதை

    மறித்து விட்டாயா
    மரித்து விட்டாயன்னு இருக்கணுமோ?

    ReplyDelete
  8. awesome... varthaikalal koli seivathu ethu thaano..?????

    ReplyDelete