Monday, October 26, 2009

உனது அலைகள் எனை அடிக்க கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட...






அலைகளோடு அழகாய்
யுத்தம் செய்கிறாய்
ஜெயித்தது என்னவோ
உன் கால்கள் தான்
தோற்றது நானடி...

Thursday, August 6, 2009

யாரும் அறியாமல்
மனதின் அடர்ந்த மூலையில்
சேர்த்து வருகிறான்
அனைவருக்குமான சொற்களை

சிறகடிக்கும் பட்டாம்பூச்சியில்
மனதை சிதறடித்தபடி
மெல்லிசை அருந்தி
நினைவுகளில் தொலைந்திருந்தான்
நீ எதிர்படும் வரை

உனக்கான சொற்களை
அனைவருகுமானதில் இருந்து பிரித்தெடுத்து
உனக்கான முகமுடியை அணிந்து
இதழ் ஓரத்தில் காத்திருந்தான்
சந்தர்பங்கள் எதிர்நோக்கி

அமைந்திடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
தவறாமல் எடுதெரிந்தான்...
உடைந்து உருகியது
உன்னுள் இருக்கும் நானாகிய பிம்பமும்
என்னுள் இருக்கும் நீயாகிய பிம்பமும்

திரும்பி நடந்தேன்.
உடல் நீங்கிய நிழலாய் தொலைந்து அலைந்தன...
நமக்குள் நமக்கென இருந்த நேசங்கள்

நம் இதழ் ஓரத்தில் சிரித்தன
இரண்டு மன சாத்தான்கள்

Sunday, July 12, 2009

உதிர்ந்து விழும் கருவறைகள்



தோன்றிடும் முன்னே உதிர்ந்து விட்டாயே

விரல் பிடித்து நடை பழக பொறுமை இல்லாமல்
சிறகுகள் கொண்டு பறந்து விட்டாயா

மொழி நிறம் உருவம் என்று அலையும் உலகில்
உருவம் கொள்ளாமல் சதை பிண்டமாய் மறித்து விட்டாயா

என்னுடல் பிரிய மனம் இன்றி
என்னுளே உறங்கி விட்டாயா

சொல்லடி என் தங்கமே

தொட்டு தடவி மகிழ்ந்த கைகள் இன்று
நீ இல்லா வெறுமையை வருடியபடி
நீ கலையவில்லை என்னுள் கலந்து விட்டாய்
என கூற கதறுகிறது

இது கலைதல் அல்ல மரணம்
ஒரு தாய்மையின் மரணம்

Tuesday, May 12, 2009

தொலைந்து விட்ட மறதியும், சில நினைவுகளும்



வெகு வேகமாய் ஓடி கொண்டு இருக்குறான்
கால அரக்கன்
மழை துளி போல் மணி துளிகள் சிதறியபடி

சிதறி விழும் ஒவ்வொரு துளியும்
நினைவுகள் கொண்டு நிரப்ப படுகிறது

உருகி வழியும் நிகழ் காலம்
கடந்த காலத்தின் நினைவு துளிகளால்
நனைந்து வழிகிறது

மரணிக்கும் ஒவ்வொரு நொடியும்
உயிர் விடும் ஒவ்வொரு புன்னகையும்
கால அரக்கனின் கண்ணாடி பேழையில்
நினைவு துளிகளாய் புதைக்க படுகிறது

பனி துளி மேல் படர்ந்திடும்
சூரிய கதிரின் கொடூரத்தோடு
எதிர்காலம் நினைவு துளிகளை சேகரித்து சிரிக்கிறது

கால அரக்கனின் நினைவு சிறகுகளில்
சிறைப்படும் இந்த வாழ்கையில்
மறதி மட்டுமே வரம்...

Sunday, May 3, 2009

:( shOULdeR tO crY oN :(




கண்ணீருக்கு பஞ்சம் இல்லை
தோள்களுக்கு மட்டுமே...

Wednesday, April 1, 2009

கனவுகள் தீர்ந்து போனால்......



உன் முகம் அணியாத காரணத்தால்
கலை இழந்தன கனவுகள்...

Sunday, March 29, 2009


பிரிவு
Keep in touch ஒவ்வொரு பிரிதலின் தொடக்கமும் இப்படி தான்...

மறக்க நினைக்கிறேன்
நாளை முதல் மறந்து விடுவேன் என்ற நாட்களின் எண்ணிக்கை மட்டுமே மறந்து வருகிறேன்

வயது வா வா சொல்கிறதே
எல்லாம் அழகு தான் அவள் பிறந்த வருடம் தெரியும் வரை