
தோன்றிடும் முன்னே உதிர்ந்து விட்டாயே
விரல் பிடித்து நடை பழக பொறுமை இல்லாமல்
சிறகுகள் கொண்டு பறந்து விட்டாயா
மொழி நிறம் உருவம் என்று அலையும் உலகில்
உருவம் கொள்ளாமல் சதை பிண்டமாய் மறித்து விட்டாயா
என்னுடல் பிரிய மனம் இன்றி
என்னுளே உறங்கி விட்டாயா
சொல்லடி என் தங்கமே
தொட்டு தடவி மகிழ்ந்த கைகள் இன்று
நீ இல்லா வெறுமையை வருடியபடி
நீ கலையவில்லை என்னுள் கலந்து விட்டாய்
என கூற கதறுகிறது
இது கலைதல் அல்ல மரணம்
ஒரு தாய்மையின் மரணம்