Saturday, February 21, 2009

பார்த்து போன பார்வைகள் எல்லாம்......


நீ இல்லை
பரவாயில்லை

உன் வாசம்
உன் ஸ்பரிசம்
உன் பேச்சு
உன் புன்னகை
உன் கண்ணீர்
உன் கண்கள்
அனைத்தும் இனி நான் காண இல்லை

இப்படி
அனைத்தையும் பறித்து சென்றாய்

பரவாயில்லை

ஆனால் ஏனடி
உன் நினைவுகளை மட்டும்
விட்டு சென்றாய்......

Tuesday, February 17, 2009

:) ராக்கியின் முன்தினம் :)


எப்போதும் போல்
இயல்பாய் தான் சொல்லி சென்றாள்
நாளை கண்டிப்பாய் வர வேண்டும் என்று

ஏனோ எனக்குள் சிறு நடுக்கம்.....

Wednesday, February 11, 2009

நிலவு தூங்கினாலும்...





இறந்த காலத்தின் சுவடுகள்
நிகழ் கால நிஜங்களோடு பிரித்தறியா வண்ணம் புணர்ந்த படி

படர்ந்திடும் பனி துளியை ரசிக்கும் நேரம்
படர்ந்து விடும் உன்னை ரசித்த நினைவுகள்

ஜன்னல் திரை விலக்கி நிலவொளியில் கலந்திட நினைக்கையில்
தேய்பிறை கூட அழகாய் தெரிந்த நாட்களின் ஞாபகங்கள்

மனதை வருடியபடி மெல்லிசை நடை பழக
மனமோ என்றோ நீ ரசித்த ஒற்றை வரியில் மரணித்தபடி

அறையில் இருளாய் நிறைந்த தனிமை விலங்கு
உன் நினைவு ஆயுதம் ஏந்தியது புன்னகை தின்ற படி

அன்று பேச படாமல் அர்த்தம் இழந்த வார்த்தைகள்
இன்று மொழி இழந்து செவிகளில் மௌனங்களாய் அலறிய படி

சிதறி விழுந்த கவிதை அரக்கனால்
கற்பிழந்த காகிதங்களின் மௌன விசும்பல்கள்

இவற்றின் மத்தியில்

வினா தெரியா விடைகளை இறைத்தபடி
நிஜங்களையும் நினைவினையும் நிலவொளியில் கரைத்த படி
நான்

ஒவ்வொரு இரவும் இப்படி தான் தொடங்குகிறது

பார்க்கும் கேட்க்கும் படிக்கும்
என அனைத்திலும் நீ தெரிவது போல் ஒரு மாயை

உன் நினைவு பிடிக்குள் என் தனிமை
தனிமை இழந்து தவிக்குதடி

நிஜங்கள் இருளில் கரைந்தபடி
நினைவுகள் கனவுகளாய் உரு மாறிட

நீள்கிறது இரவின் பயணம்...

ஒவ்வொரு கனவின் தோன்றல் மரித்தலின் இடையில்
நான் நானாய் மாறி உறங்கிட

மெல்ல விடிகிறது பொழுது
இன்றும் அவள் இல்லாத தனிமையினை தாங்கியபடி.....

Tuesday, February 10, 2009

காதலாய் ஒரு காமம்....


காதலா காமமா
நம் இருவருக்கு இடையில்
கேட்டு விட்டாள் தோழி ஒருத்தி

ஊரில் உள்ள எனக்கு தெரிந்த
அனைத்து கெட்ட வார்த்தையிலும்
திட்டி விட்டேன் உன்னை

உன்னை எதற்கா?
கட்டுக்குள் அடங்கா கைகளுக்கும் கள்ள உதடுகளுக்கும்
சொந்தக்காரன் நீ தானே

மெல்ல சுயம் வந்து
காரணம் வினவினேன் ஏன் என்று

இடை பற்றிய உன் விரல்
இதழ் தீண்டிய உன் உதடுகள்
காற்றுக்கு கூட கருணை காட்டாத
உன் நெருக்கம்
தலையணையாய் மாறி போன என் மடி

இப்படி தொடர்ந்தாள்
என் நாணங்களை சீண்டிய படி

பாவி உனக்கென்ன வெட்கம் கெட்டவன்
இங்கு நான் அல்லவா தேள் கொட்டிய திருடியாய்....

அவளது புன்னகை அலறியது
என்னை வெற்றி கொண்டதாய்

'இந்த காயம் ஞாபகம் இருக்கா'
எதிர் கேள்வி கேட்டேன்

புரியா பார்வையை பதிலாய் வீசினாள்

பெருமையும் காதலுமாய்...
தொடர்ந்தேன்

நீ இழுக்க உடைந்த வளையல்
உரசி சென்ற தடத்தை
நாணம் மட்டும் இன்றி ரத்தமும் சிவபேற்ற

உன் கண்ணில் தெரிந்த
உயிர் பிரியும் வேதனையை
கன்னம் நனைத்த கண்ணீர் துளியினை...

Sunday, February 8, 2009

சில ஜிமெயில் சிதறல்கள்....

என்னோட ஜிமெயில்-அ பழைய mails பார்த்துட்டு இருந்தேன். அதுல கிடைத்த சில இவை. எனக்கு மிகவும் பிடித்தவை


இப்போ இந்த படம். எல்லாருக்கும் தெரியும், வள்ளுவர். கன்னியாகுமரில வானத்திற்கு தமிழ் பால் புகட்டி கொண்டு இருக்கும் சிலை. இந்த படம் சமிபத்துல தோழி ஒருத்தி அனுப்பி வெச்சது. இந்த படத்துல அவரு நிக்குற ஸ்டைலில் சிறிது நளினம் இருபதாய் தோன்றியது. இது அந்த கால தோரணையா இல்லை காரணம் என்னவோ தெரிந்தவர் கூறலாம்


Friday, February 6, 2009

tO mY frIenD....

5 விரலில் ஒன்றில் மட்டும் மோதிரம் போட்டாச்சு :) :) :)


நான் இல்லாமல் உன் கல்யாணமா
எத்தனை முறை சொல்லி இருப்பேன்
இதோ இன்று அதே நான் இல்லாமல் தான்
இனிதே நடந்தேறியது உன் திருமணம்

தோழி

வாடும் முன் பார்த்து விடு
பூத்து இருக்கும் என் வாழ்த்துகளை
missed call வடிவில் உன் தொலைபேசியில்...


bACk tO sQuaRE oNE aTLaST :D
இன்று தொடங்கும் இந்த பந்தம் என்றும் இனித்திட என் வாழ்த்துக்கள்