
காதலா காமமா
நம் இருவருக்கு இடையில்
கேட்டு விட்டாள் தோழி ஒருத்தி
ஊரில் உள்ள எனக்கு தெரிந்த
அனைத்து கெட்ட வார்த்தையிலும்
திட்டி விட்டேன் உன்னை
உன்னை எதற்கா?
கட்டுக்குள் அடங்கா கைகளுக்கும் கள்ள உதடுகளுக்கும்
சொந்தக்காரன் நீ தானே
மெல்ல சுயம் வந்து
காரணம் வினவினேன் ஏன் என்று
இடை பற்றிய உன் விரல்
இதழ் தீண்டிய உன் உதடுகள்
காற்றுக்கு கூட கருணை காட்டாத
உன் நெருக்கம்
தலையணையாய் மாறி போன என் மடி
இப்படி தொடர்ந்தாள்
என் நாணங்களை சீண்டிய படி
பாவி உனக்கென்ன வெட்கம் கெட்டவன்
இங்கு நான் அல்லவா தேள் கொட்டிய திருடியாய்....
அவளது புன்னகை அலறியது
என்னை வெற்றி கொண்டதாய்
'இந்த காயம் ஞாபகம் இருக்கா'
எதிர் கேள்வி கேட்டேன்
புரியா பார்வையை பதிலாய் வீசினாள்
பெருமையும் காதலுமாய்...
தொடர்ந்தேன்
நீ இழுக்க உடைந்த வளையல்
உரசி சென்ற தடத்தை
நாணம் மட்டும் இன்றி ரத்தமும் சிவபேற்ற
உன் கண்ணில் தெரிந்த
உயிர் பிரியும் வேதனையை
கன்னம் நனைத்த கண்ணீர் துளியினை...
நம் இருவருக்கு இடையில்
கேட்டு விட்டாள் தோழி ஒருத்தி
ஊரில் உள்ள எனக்கு தெரிந்த
அனைத்து கெட்ட வார்த்தையிலும்
திட்டி விட்டேன் உன்னை
உன்னை எதற்கா?
கட்டுக்குள் அடங்கா கைகளுக்கும் கள்ள உதடுகளுக்கும்
சொந்தக்காரன் நீ தானே
மெல்ல சுயம் வந்து
காரணம் வினவினேன் ஏன் என்று
இடை பற்றிய உன் விரல்
இதழ் தீண்டிய உன் உதடுகள்
காற்றுக்கு கூட கருணை காட்டாத
உன் நெருக்கம்
தலையணையாய் மாறி போன என் மடி
இப்படி தொடர்ந்தாள்
என் நாணங்களை சீண்டிய படி
பாவி உனக்கென்ன வெட்கம் கெட்டவன்
இங்கு நான் அல்லவா தேள் கொட்டிய திருடியாய்....
அவளது புன்னகை அலறியது
என்னை வெற்றி கொண்டதாய்
'இந்த காயம் ஞாபகம் இருக்கா'
எதிர் கேள்வி கேட்டேன்
புரியா பார்வையை பதிலாய் வீசினாள்
பெருமையும் காதலுமாய்...
தொடர்ந்தேன்
நீ இழுக்க உடைந்த வளையல்
உரசி சென்ற தடத்தை
நாணம் மட்டும் இன்றி ரத்தமும் சிவபேற்ற
உன் கண்ணில் தெரிந்த
உயிர் பிரியும் வேதனையை
கன்னம் நனைத்த கண்ணீர் துளியினை...
ஊடலை அழகாக
ReplyDeleteஎடுத்து சொல்லி இருக்கீங்க .
ரெம்ப நல்லா இருக்கு ...
வார்த்தைகள் அழகாக உள்ளன.. இருந்தாலும் முடிவு கொஞ்சம் தெளிவாக இல்லாதது போல் உள்ளது..
ReplyDeleteநன்றி நிலாவன்...
ReplyDeleteநன்றி கார்த்திகைப் பாண்டியன் வருகைக்கும் கருத்துக்கும் குட்டுக்கும் :)
ReplyDelete//இடை பற்றிய உன் விரல்
ReplyDeleteஇதழ் தீண்டிய உன் உதடுகள்
காற்றுக்கு கூட கருணை காட்டாத
உன் நெருக்கம்
தலையணையாய் மாறி போன என் மடி
//
ரொம்ப ரொமாண்டிக்...ரொம்ப அழகான உணர்வுகளை சொல்லும் வரிகள்...
நன்றி புதியவன் வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteநல்லா இருக்கு :-)
ReplyDeleteநன்றி ninaivellam
ReplyDeleteHi
ReplyDeleteஉங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
superb... y tat pic alone has face covered? kaamathai moodi maraitha kaadhala?
ReplyDelete