Monday, November 9, 2009

டிசம்பர் பூக்கள்


டிசம்பர் பூக்கள்

தினமும் மாலை
பூ விற்கும் பெண்ணிடம்
வாங்கி விடுவேன்

நான் தரும் ஐந்து ரூபாய்க்கு
சின்னதாய் மல்லிகை சரமும் சேர்த்து தருவாள்
நாசி தீண்டும் வியர்வையின் சொந்தகாரி

அன்றைய ஆத்திகனாகிய நான்
மல்லிகையினை சாமிக்கு இட்டேன்

இன்று குளிர் பெட்டியிலும்
நாளையின் காலையில்
உனது இயற்கை செயற்கை
கூந்தல் நடுவிலும்
பூத்து இருப்பாள்

பின் ஒரு நாள்
என்னவள் என நான் நினைத்த
அவள் கூந்தலிலும்
பூத்து இருந்ததாய் ஞாபகம்

இருந்தும் எனக்கு
ஏனோ என்றும் அவள்
உனது நரை முடி
டிசம்பர் ஆகவே தெரிந்து வந்தாள்

இரண்டு வருடமாய்
இந்த வெள்ளை தேசத்தில்
மலர் குவியல்களிலும்
மங்கையரின் மயிர் குவியல்களிலும்
ஏனோ அவள் தென்படவே இல்லை

இந்த வருட விடுமுறையில்
மீண்டும் ஒரு நாள்
உன்னை நரை முடி கிழவியின்
கூந்தலில் சிறை பிடிக்க வேண்டி
ஐந்து ரூபாய் தேடி எடுத்து வைத்தேன்

அந்த சிறிய மல்லிகை சரம்
இன்றும் தருவாளோ அந்த
நாசி தீண்டும் வியர்வையின் சொந்தகாரி

2 comments:

  1. ஆஹா! கிறுக்கல் என்பது உறுத்துகிறது.

    ReplyDelete
  2. என்னாது.... இது கிறுக்கலா?????

    நிறைகுடம் தலும்பாதுன்றது இதானா!!!

    ReplyDelete