
வெகு வேகமாய் ஓடி கொண்டு இருக்குறான்
கால அரக்கன்
மழை துளி போல் மணி துளிகள் சிதறியபடி
சிதறி விழும் ஒவ்வொரு துளியும்
நினைவுகள் கொண்டு நிரப்ப படுகிறது
உருகி வழியும் நிகழ் காலம்
கடந்த காலத்தின் நினைவு துளிகளால்
நனைந்து வழிகிறது
மரணிக்கும் ஒவ்வொரு நொடியும்
உயிர் விடும் ஒவ்வொரு புன்னகையும்
கால அரக்கனின் கண்ணாடி பேழையில்
நினைவு துளிகளாய் புதைக்க படுகிறது
பனி துளி மேல் படர்ந்திடும்
சூரிய கதிரின் கொடூரத்தோடு
எதிர்காலம் நினைவு துளிகளை சேகரித்து சிரிக்கிறது
கால அரக்கனின் நினைவு சிறகுகளில்
சிறைப்படும் இந்த வாழ்கையில்
மறதி மட்டுமே வரம்...
காலத்தின் முக்கியத்துவத்தையும் அதை இழந்து பிறகு அதைதேடி தவிக்கும் துன்பத்தையும் அழகான வரிகளின் சொல்லிருக்கீங்க வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்லாயிருக்கு
//உருகி வழியும் நிகழ் காலம்
ReplyDeleteகடந்த காலத்தின் நினைவு துளிகளால்
நனைந்து வழிகிறது
//
இந்த வரிகள் ரொம்ப அழகு...ஆழமான உண்மைகளோட கவிதை அருமையோ அருமை...
//உருகி வழியும் நிகழ் காலம்
ReplyDeleteகடந்த காலத்தின் நினைவு துளிகளால்
நனைந்து வழிகிறது//
ரசித்த வரிகள்...கவிதை அருமை...
நன்றி அபுஅஃப்ஸர், Divyapriya, புதியவன்
ReplyDeleteமரணிக்கும் ஒவ்வொரு நொடியும்
ReplyDeleteஉயிர் விடும் ஒவ்வொரு புன்னகையும்
கால அரக்கனின் கண்ணாடி பேழையில்
நினைவு துளிகளாய் புதைக்க படுகிறது
அருமையான வரிகள்
நன்றி குமரை நிலாவன்
ReplyDeleteஉங்களுக்கு இங்கு ஒரு விருது காத்திருக்கிறது. என் வாழ்த்துக்கள்.
ReplyDelete