
மனதின் அடர்ந்த மூலையில்
சேர்த்து வருகிறான்
அனைவருக்குமான சொற்களை
சிறகடிக்கும் பட்டாம்பூச்சியில்
மனதை சிதறடித்தபடி
மெல்லிசை அருந்தி
நினைவுகளில் தொலைந்திருந்தான்
நீ எதிர்படும் வரை
உனக்கான சொற்களை
அனைவருகுமானதில் இருந்து பிரித்தெடுத்து
உனக்கான முகமுடியை அணிந்து
இதழ் ஓரத்தில் காத்திருந்தான்
சந்தர்பங்கள் எதிர்நோக்கி
அமைந்திடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
தவறாமல் எடுதெரிந்தான்...
உடைந்து உருகியது
உன்னுள் இருக்கும் நானாகிய பிம்பமும்
என்னுள் இருக்கும் நீயாகிய பிம்பமும்
திரும்பி நடந்தேன்.
உடல் நீங்கிய நிழலாய் தொலைந்து அலைந்தன...
நமக்குள் நமக்கென இருந்த நேசங்கள்
நம் இதழ் ஓரத்தில் சிரித்தன
இரண்டு மன சாத்தான்கள்
nice:-)
ReplyDeleteThanks இயற்கை
ReplyDeleteஉடல் நீங்கிய நிழலாய் தொலைந்து அலைந்தன...
ReplyDeleteநமக்குள் நமக்கென இருந்த நேசங்கள்
Nice lines... Keep writing more