Wednesday, February 11, 2009

நிலவு தூங்கினாலும்...





இறந்த காலத்தின் சுவடுகள்
நிகழ் கால நிஜங்களோடு பிரித்தறியா வண்ணம் புணர்ந்த படி

படர்ந்திடும் பனி துளியை ரசிக்கும் நேரம்
படர்ந்து விடும் உன்னை ரசித்த நினைவுகள்

ஜன்னல் திரை விலக்கி நிலவொளியில் கலந்திட நினைக்கையில்
தேய்பிறை கூட அழகாய் தெரிந்த நாட்களின் ஞாபகங்கள்

மனதை வருடியபடி மெல்லிசை நடை பழக
மனமோ என்றோ நீ ரசித்த ஒற்றை வரியில் மரணித்தபடி

அறையில் இருளாய் நிறைந்த தனிமை விலங்கு
உன் நினைவு ஆயுதம் ஏந்தியது புன்னகை தின்ற படி

அன்று பேச படாமல் அர்த்தம் இழந்த வார்த்தைகள்
இன்று மொழி இழந்து செவிகளில் மௌனங்களாய் அலறிய படி

சிதறி விழுந்த கவிதை அரக்கனால்
கற்பிழந்த காகிதங்களின் மௌன விசும்பல்கள்

இவற்றின் மத்தியில்

வினா தெரியா விடைகளை இறைத்தபடி
நிஜங்களையும் நினைவினையும் நிலவொளியில் கரைத்த படி
நான்

ஒவ்வொரு இரவும் இப்படி தான் தொடங்குகிறது

பார்க்கும் கேட்க்கும் படிக்கும்
என அனைத்திலும் நீ தெரிவது போல் ஒரு மாயை

உன் நினைவு பிடிக்குள் என் தனிமை
தனிமை இழந்து தவிக்குதடி

நிஜங்கள் இருளில் கரைந்தபடி
நினைவுகள் கனவுகளாய் உரு மாறிட

நீள்கிறது இரவின் பயணம்...

ஒவ்வொரு கனவின் தோன்றல் மரித்தலின் இடையில்
நான் நானாய் மாறி உறங்கிட

மெல்ல விடிகிறது பொழுது
இன்றும் அவள் இல்லாத தனிமையினை தாங்கியபடி.....

16 comments:

  1. ஒவ்வொரு வரியிலும் காதலும் தனிமையும் ஏக்கமும் நிரம்பி வழிகின்றன.. அருமை நண்பா..

    ReplyDelete
  2. நன்றி கார்த்திகைப் பாண்டியன்

    ReplyDelete
  3. காதலும் காதலியின் நினைவுகளுமாய்
    நகர்கின்றது கவிதை .....
    அருமை நண்பா .

    ReplyDelete
  4. 'காதலும் காதலியின் நினைவுகளுமாய்
    நகர்கின்றது கவிதை .....
    அருமை நண்பா .'

    நன்றி நண்பரே

    ReplyDelete
  5. //உன் நினைவு பிடிக்குள் என் தனிமை
    தனிமை இழந்து தவிக்குதடி//

    அருமை...தனிமையிலும் இனிமையா? நல்லா இருக்கு கவிதை...

    ReplyDelete
  6. வார்த்தைகளை குறைத்தால்
    வலிமை கூடுமென்பது என் எண்ணம்,
    காதல் வயப்பட்ட தனிமையின் கொடுமையை
    கண்டால்தான் புரியும்,
    நிஜம் மறந்து நிழல் தேடி ஓடுவதை
    நிறுத்தியுள்ளீர் கண்முன்னே,

    அருமை.

    ReplyDelete
  7. நன்றி தேனியார்

    ReplyDelete
  8. கவிதையின் வரிகள் அத்தனையும் அருமை வாழ்த்துக்கள் இவன்...

    ReplyDelete
  9. வாழ்த்துகளுக்கு நன்றி புதியவன்

    ReplyDelete
  10. //உன் நினைவு பிடிக்குள் என் தனிமை
    தனிமை இழந்து தவிக்குதடி//

    தனிமைக்கூட சில சமயம் நம்மிடம் தனித்து நின்றாலும் அதுவும் இனிமைதான் இல்லையா? :-)

    ReplyDelete
  11. "தனிமைக்கூட சில சமயம் நம்மிடம் தனித்து நின்றாலும் அதுவும் இனிமைதான் இல்லையா? :-)"

    உண்மை தான் தனிமை என்றுமே எனக்கு சமயம் அழகு தான்...
    என்னை கவிதை எழுத வைக்குதே... பாவம் நீங்க எல்லாம் தான் கொஞ்சம் கஷ்ட படுவீங்க அத படிக்க... :D

    ReplyDelete
  12. நன்றி இனியவள் புனிதா கருத்துக்கும் வருகைக்கும்

    ReplyDelete
  13. தனிமைக்கூட சில சமயம் நம்மிடம் தனித்து நின்றாலும் அதுவும் இனிமைதான் இல்லையா? :-)"

    aval nenaivu unnudan irupathanaal thanimaium inimai than.

    kavithai varikal nalla iruku pa

    ReplyDelete
  14. "அவள் நினைவு உன்னுடன் இருப்பதனால் தனிமையும் இனிமை தான்"


    உண்மை தான் காயத்ரி.
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  15. Hi

    உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

    ReplyDelete