Sunday, July 12, 2009

உதிர்ந்து விழும் கருவறைகள்



தோன்றிடும் முன்னே உதிர்ந்து விட்டாயே

விரல் பிடித்து நடை பழக பொறுமை இல்லாமல்
சிறகுகள் கொண்டு பறந்து விட்டாயா

மொழி நிறம் உருவம் என்று அலையும் உலகில்
உருவம் கொள்ளாமல் சதை பிண்டமாய் மறித்து விட்டாயா

என்னுடல் பிரிய மனம் இன்றி
என்னுளே உறங்கி விட்டாயா

சொல்லடி என் தங்கமே

தொட்டு தடவி மகிழ்ந்த கைகள் இன்று
நீ இல்லா வெறுமையை வருடியபடி
நீ கலையவில்லை என்னுள் கலந்து விட்டாய்
என கூற கதறுகிறது

இது கலைதல் அல்ல மரணம்
ஒரு தாய்மையின் மரணம்

Tuesday, May 12, 2009

தொலைந்து விட்ட மறதியும், சில நினைவுகளும்



வெகு வேகமாய் ஓடி கொண்டு இருக்குறான்
கால அரக்கன்
மழை துளி போல் மணி துளிகள் சிதறியபடி

சிதறி விழும் ஒவ்வொரு துளியும்
நினைவுகள் கொண்டு நிரப்ப படுகிறது

உருகி வழியும் நிகழ் காலம்
கடந்த காலத்தின் நினைவு துளிகளால்
நனைந்து வழிகிறது

மரணிக்கும் ஒவ்வொரு நொடியும்
உயிர் விடும் ஒவ்வொரு புன்னகையும்
கால அரக்கனின் கண்ணாடி பேழையில்
நினைவு துளிகளாய் புதைக்க படுகிறது

பனி துளி மேல் படர்ந்திடும்
சூரிய கதிரின் கொடூரத்தோடு
எதிர்காலம் நினைவு துளிகளை சேகரித்து சிரிக்கிறது

கால அரக்கனின் நினைவு சிறகுகளில்
சிறைப்படும் இந்த வாழ்கையில்
மறதி மட்டுமே வரம்...

Sunday, May 3, 2009

:( shOULdeR tO crY oN :(




கண்ணீருக்கு பஞ்சம் இல்லை
தோள்களுக்கு மட்டுமே...

Wednesday, April 1, 2009

கனவுகள் தீர்ந்து போனால்......



உன் முகம் அணியாத காரணத்தால்
கலை இழந்தன கனவுகள்...

Sunday, March 29, 2009


பிரிவு
Keep in touch ஒவ்வொரு பிரிதலின் தொடக்கமும் இப்படி தான்...

மறக்க நினைக்கிறேன்
நாளை முதல் மறந்து விடுவேன் என்ற நாட்களின் எண்ணிக்கை மட்டுமே மறந்து வருகிறேன்

வயது வா வா சொல்கிறதே
எல்லாம் அழகு தான் அவள் பிறந்த வருடம் தெரியும் வரை

Wednesday, March 25, 2009

தோழி




சிறகுகள் களைந்தாய்
ஒளிவட்டம் தொலைத்தாய்
அமைதி மறந்தாய்
புன்னகை மறைத்தாய்
சினத்தால் சிதறடித்தாய் ( சில சமயம் :) )

கனவுகளை தோளில் சுமந்தபடி
எதையோ தேடி
எங்கோ தொலைந்த பலரை
நிழல்தனில் இருந்து நிஜத்திற்கு மீட்டு எடுத்த

இலக்கணம் மீறிய தேவதை இவள்...

Saturday, February 21, 2009

பார்த்து போன பார்வைகள் எல்லாம்......


நீ இல்லை
பரவாயில்லை

உன் வாசம்
உன் ஸ்பரிசம்
உன் பேச்சு
உன் புன்னகை
உன் கண்ணீர்
உன் கண்கள்
அனைத்தும் இனி நான் காண இல்லை

இப்படி
அனைத்தையும் பறித்து சென்றாய்

பரவாயில்லை

ஆனால் ஏனடி
உன் நினைவுகளை மட்டும்
விட்டு சென்றாய்......